டி10 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நார்த்தன் வாரியர்ஸ் அணி மொயீன் அலி, கென்னர் லூயிஸ் ஆகியோரது அதிரடியான தொடக்கத்தினால் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக மொயின் அலி, கென்னர் லூயிஸ் இருவரும் தலா 49 ரன்களைச் சேர்த்து நூழிலையில் அரைசதத்தை தவறவிட்டனர்.

இதையடுத்து கடின இலக்கைத் துரத்திய சென்னை பிரேவ்ஸ் அணி வீரர்கள் வழக்கம் போல் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர். அந்த அணியில் பனுகா ராஜபக்ஷ 34 ரன்களையும், ரவி போபாரா 30 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.  

இதனால் 9.5 ஓவர்களிலேயே சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நார்த்தன் வாரியர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை பிரேவ்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News