ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கனடா அணியானது நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஸ்ரேயாஸ் மொவ்வா அகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைக் குவித்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் கிர்டன் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 49 ரன்களையும், ஸ்ரேயாஸ் மொவ்வா 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கிரேய்க் யங் மற்றும் பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியானது தொடக்கம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 

Advertisement

முதல் 5 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் விளையாடிய அந்த அணி அதன்பின் சீரான இடைவேளையின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருகட்டத்தில் 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த அந்த அணி, ஜார்ஜ் டக்ரேல் - மார்க் அதிர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீண்டு வெற்றிக்கு அருகில் சென்றது. ஆனால் இறுதியில் அதிரடியாக விளையாடிய மார்க் அதிர் 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

மறுபக்கம் கிரேய்க் யங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 30 ரன்களைச் சேர்த்த போதும் அயர்லாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கனடா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெர்மி கார்டன், திலன் ஹெய்லிகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

 

இந்நிலையில் இப்போட்டியில் கனடா அணி வீரர் ஆரோன் ஜான்சன் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி, திலன் ஹெய்லிகர் வீசிய 11ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் அயர்லாந்து அணியின் அதிரடி வீரர் கர்டிஸ் காம்பேர் ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கியடித்த பந்தை ஆரோன் ஜான்சன் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் இக்காணொளீயானது இணைத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News