ஒரே ஓவரில் அயர்லாந்து தொடக்க வீரர்களை காலி செய்த அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Jun 05 2024 21:01 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று இரவு நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான இந்திய  அணியில் குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. 

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ள தடுமாறிய நிலையில், அணியின் ஸ்கோரும் ஆமை வேகத்தில் உயர்ந்தது. ஒருகட்டத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

அவரைத்தொடர்ந்து மறுபக்கம் தொடர்ந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் ஆண்ட்ரூ பால்பிர்னியும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையை கட்டினார். இதனால் அயர்லாந்து அணி 9 ரன்களுக்குள்ளேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் தனது ஒரே ஓவரில் அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களை காலிசெய்த அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு குறித்த காணொளியானது வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை