T20 WC 2024: லோக்கி ஃபெர்குசன் அபாரம்; பிஎன்ஜி-யை 78 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!

Updated: Mon, Jun 17 2024 22:44 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் எது என்பதும் ஏறத்தாழ முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. 

இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் தமதமானது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பப்புவா நியூ கினி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி உரா ஒரு ரன்னிலும், கேப்டன் அசாத் வாலா 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சார்லஸ் அமினி 17 ரன்களிலும், செசே பாவ் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹிரி ஹிரி 7 ரன்களிலும், சாத் சோப்பர் ஒரு ரன்னிலும், கிப்லின் டொரிகா 5 ரன்களிலும், நொர்மன் வனுவா 14 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பப்புவா நியூ கினி அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபர்குசன் 4 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

அதேசமயம் டிரென்ட் போல்ட், டிம் சௌதீ மற்றும் இஷ் சோதி ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை