ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த விராட் கோலி - காணொளி!

Updated: Thu, Jun 20 2024 21:17 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ரிஷப் பந்தும் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். 

இப்போட்டியில் 4 பவுண்டரிகளை விளாசிய ரஷித் கான் 20 ரன்களைச் சேர்த்த நிலையில், ரஷித் கான் பந்துவீச்சில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 24 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

பின்னர் களமிறங்கிய ஷிவம் தூபேவும் 10 ரன்களில் ரஷித் கான் சுழலில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை