டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று 20ஆவது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. 

Advertisement

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ், முகமது நைம் ஆகியோர் மொயீன் அலி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கி முஷ்பிக்கூர் ரஹிம், மஹ்முதுல்லா இணை சிறுது நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஆனால் ரஹீம் 29 ரன்னிலும், மஹ்முதுல்லா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டைமல் மில்ஸ் 4 விக்கெட்டுகளையும், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News