டி20 உலகக்கோப்பை: ஹசில்வுட் பந்துவீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 38ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் 15 ரன்னிலும், எவின் லூயிஸ் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஹெட்மையர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
Also Read: T20 World Cup 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக் கீரன் பொல்லார்ட் 44 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.