ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்னின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 85 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. 

இதனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசுவது என்றே தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஆனாலும் அதிரடியை நிறுத்தாத இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

அதன்பின் 53 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர், ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் போல்டாக, அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் அதிரடியில் மிரட்டினார். 

Advertisement

இதனால் 18.5 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 77 ரன்களையும், டேவிட் வார்னர் 53 ரன்களையும் சேர்த்திருந்தனர்.

Also Read: T20 World Cup 2021

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை கையிலேந்தியது. மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் எனும் பெருமையை ஆரோன் ஃபிஞ்ச் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News