டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 39 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்து அசத்தினார். 

இதையடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமானும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினர். பின் 67 ரன்னில் ரிஸ்வான் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்து ஃபகர் ஸமானும் அரைசதம் கடந்து அசத்தினார். 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்களையும், ஃபகர் ஸமான் 55 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News