டி20 உலகக்கோப்பை: இந்திய அணியுடன் பயணிக்கும் உம்ரான் மாலிக்!

Updated: Sat, Oct 01 2022 12:22 IST
T20 WC: Siraj & Umran Will Travel To Australia With The Indian Contingent (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டில் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஜஸ்பிரித் பும்ராவின் விலகல் தான். காயம் காரணமாக அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து அவருக்கு மாற்று வீரராக யாரை சேர்ப்பது என்ற குழப்பம் சமூகவலைதளங்களில் எழுந்திருந்தது. இதற்காக முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் உள்ளிட்டோரின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. எனினும் பும்ராவுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும், டி20 உலகக்கோப்பையின் முதல் சில போட்டிகளில் தான் அவர் விளையாட மாட்டார், பின்னர் அணிக்கு திரும்புவார் என கங்குலியே அறிவித்தார்.

இந்நிலையில் பும்ராவின் இடத்தை நிரப்ப பிசிசிஐ பெரும் ட்விஸ்ட் கொடுத்துள்ளது. அக்டோபர் 6ஆம் தேதியன்று இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இதில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருடன் உம்ரான் மாலிக்கையும் அழைத்து செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்காக அவரை தொடர்பு கொண்டு தயாராகும்படி கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது உலகக்கோப்பைகாக இந்த முறை பேக் அப் வீரர்களையும், உடன் அழைத்து செல்லவுள்ளதாக முடிவெடுத்தனர். அதன்படி உம்ரான் மாலிக்கை ஒரு பேக் அப் வீரராக அழைத்து செல்லவுள்ளனர். அங்கு இருக்கும் கால சூழல்களுக்கு ஏற்ப அவரை மெயின் அணியில் கொண்டு வரவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய களங்களில் அதிக வேகமும், அதிக பவுன்ஸும் இருக்கும். இதற்கேற்ற திறமைகளை கொண்டவர் தான் உம்ரான் மாலிக். 150+ கிமீ வேகத்தில் அசால்ட்டாக பந்துவீசுகிறார். எனவே ஆஸ்திரேலிய களத்திற்கு இவரை அழைத்துச் சென்றால் நிச்சயம் நன்மை இருக்கும் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை