ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளில் 7 முறை வெற்றியைப் பதிவுசெய்து சாதனையும் படைத்துள்ளது. 

Advertisement

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்களையும், அக்ஸர் படேல் 20 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவூஃப் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியிலும் முகமது ரிஸ்வானை தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த முகமது ரிஸ்வானும் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பும் கேள்வி குறியாகியுள்ளது. மேலும் அந்த அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரே காரணம் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கான எல்லா புகழும் பந்து வீச்சாளர்களையே சேரும். அவர்கள் ஒரு யூனிட்டாக பந்துவீசிய விதத்திற்காக நான் அவர்களை பாராட்ட வேண்டும், குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா.

ஹர்திக் பாண்டியாவின் நான்கு ஓவர்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீசுகிறார்கள். 120 ரன்களை இலக்காகக் கொண்டு ஒரு போட்டியில் வெற்றி பெறுவது பெரிய சாதனை. அதேசமயம் ஒவ்வொரு முறையும் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியாது என்பதால், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய பேட்டிங் யூனிட் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News