இலங்கை அணிக்கு எதிராக வெற்றிபெறுவோம் என நம்புகிறேன் - ரோஹித் பௌடல்!

Updated: Tue, Jun 11 2024 19:29 IST
Image Source: Google

 

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசிஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை அதிகாலை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பானது கேள்விகுறியாக மாறியுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெறுவோம் என நேபாள் அணி கேப்டன் ரோஹித் பௌடல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் சமநிலையில் உள்ளன. அதற்கேற்றவாறு எங்கள் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அதேசமயம் மற்ற அணிகள் மிகப்பெரும் அணிகளை அப்செட் செய்வது எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது. 

அதனால் நாளை ஆட்டத்தில் நாங்களும் அதனையே செய்ய முயற்சிப்போம். ஒரு அணியாக நாங்கள் நாளை வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம், இத்தொடருக்கான கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் தயாராகி வருகிறோம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் விளையாடிய விதம், எங்கள்ள் அணி வீரர்களுக்கு எப்போதும் நம்பிக்கை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மேலும் நெதர்லாந்து அணிக்கு எதிரான எங்களுடைய முதல் போட்டிக்கு பிறகு நாங்கள் பயிற்சி செய்ய போதிய அவகாசம் எங்களுக்கு இருந்தது. அதனால் நாளைய போட்டிக்கு தயாராவதற்கும், குறிப்பாக இந்த சூழ்நிலையை தயார் செய்து மாற்றியமைக்கவும் இது எங்களுக்கு உதவியாக உள்ளது. அதேசமயம் இங்குள்ள பிட்சிற்கு ஏற்ப எங்களது பயிற்சியைப் பயன்படுத்தியுள்ளோம். மேலும் நாளைய ஆட்டத்திற்கு நாங்கள் நன்றாகத் தயாராக உள்ளோம் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை