டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. 

Advertisement

தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

Advertisement

இந்தியாவின் அனைத்து லீக் போட்டிகளுமே அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஃப்ளோரிடா நகரில் இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெற உள்ளது. இந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-ல் ஜூன் 29ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.

குரூப்

  • குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
  • குரூப் பி - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
  • குரூப் சி - நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா
  • குரூப் டி - தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள்

டி20 உலகக்கோப்பை லீக் அட்டவணை

  • ஜூன் 1- அமெரிக்கா vs கனடா, டல்லாஸ்
  • ஜூன் 2- வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா, கயானா
  • ஜூன் 2- நமீபியா vs ஓமன், பார்படாஸ்
  • ஜூன் 3- இலங்கை vs தென் ஆப்பிரிக்கா, நியூயார்க்
  • ஜூன் 4- ஆஃப்கானிஸ்தான் vs உகாண்டா, கயானா
  • ஜூன் 4- இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து, பார்படாஸ்
  • ஜூன் 5- இந்தியா vs அயர்லாந்து, நியூயார்க்
  • ஜூன் 5- பப்புவா நியூ கினியா vs உகாண்டா, கயானா
  • ஜூன் 5- ஆஸ்திரேலியா vs ஓமன், பார்படாஸ்
  • ஜூன் 6- அமெரிக்கா vs பாகிஸ்தான், டல்லாஸ்
  • ஜூன் 6- நமீபியா vs ஸ்காட்லாந்து, பார்படாஸ்
  • ஜூன் 7- கனடா vs அயர்லாந்து, நியூயார்க்
  • ஜூன் 7- நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான், கயானா
  • ஜூன் 7- இலங்கை vs வங்கதேசம், டல்லாஸ்
  • ஜூன் 8- நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, நியூயார்க்
  • ஜூன் 8- ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, பார்படாஸ்
  • ஜூன் 8- வெஸ்ட் இண்டீஸ் vs உகாண்டா, கயானா
  • ஜூன் 9- இந்தியா vs பாகிஸ்தான், நியூயார்க்
  • ஜூன் 9- ஓமன் vs ஸ்காட்லாந்து, ஆன்டிகுவா & பார்புடா
  • ஜூன் 10- தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம், நியூயார்க்
  • ஜூன் 11- பாகிஸ்தான் vs கனடா, நியூயார்க்
  • ஜூன் 11- இலங்கை vs நேபாளம், லாடர்ஹில்
  • ஜூன் 11- ஆஸ்திரேலியா vs நமீபியா, ஆன்டிகுவா & பார்புடா
  • ஜூன் 12- அமெரிக்கா vs இந்தியா, நியூயார்க்
  • ஜூன் 12- வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, டிரினிடாட் & டொபாகோ
  • ஜூன் 13- இங்கிலாந்து vs ஓமன் ஆன்டிகுவா & பார்புடா
  • ஜூன் 13- வங்கதேசம் vs நெதர்லாந்து, கிரெனடைன்ஸ்
  • ஜூன் 13- ஆஃப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினி, டிரினிடாட் & டொபாகோ
  • ஜூன் 14- அமெரிக்கா vs அயர்லாந்து, லாடர்ஹில்
  • ஜூன் 14- தென் ஆப்பிரிக்கா vs நேபாளம், கிரெனடைன்ஸ்
  • ஜூன் 14- நியூசிலாந்து vs உகாண்டா, டிரினிடாட் & டொபாகோ
  • ஜூன் 15- இந்தியா vs கனடா, லாடர்ஹில்
  • ஜூன் 15- நமீபியா vs இங்கிலாந்து, ஆன்டிகுவா & பார்புடா
  • ஜூன் 15- ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து, செயிண்ட் லூசியா
  • ஜூன் 16- பாகிஸ்தான் vs அயர்லாந்து, லாடர்ஹில்
  • ஜூன் 16- வங்கதேசம் vs நேபாளம், கிரெனடைன்ஸ்
  • ஜூன் 16- இலங்கை vs நெதர்லாந்து, செயின்ட் லூசியா
  • ஜூன் 17- நியூசிலாந்து vs பப்புவா நியூ கினியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ
  • ஜூன் 17- வெஸ்ட் இண்டீஸ் vs ஆஃப்கானிஸ்தான், செயின்ட் லூசியா

சூப்பர் 8 சுற்று அட்டவணை

  • ஜூன் 19- A2 vs D1, ஆன்டிகுவா & பார்புடா
  • ஜூன் 19- BI vs C2, செயின்ட் லூசியா
  • ஜூன் 20- C1 vs A1, பார்படாஸ்
  • ஜூன் 20- B2 vs D2, ஆன்டிகுவா & பார்புடா
  • ஜூன் 21- B1 vs D1, செயின்ட் லூசியா
  • ஜூன் 21- A2 vs C2, பார்படாஸ்
  • ஜூன் 22- A1 vs D2, ஆன்டிகுவா & பார்புடா
  • ஜூன் 22- C1 vs B2, கிரெனடைன்ஸ்
  • ஜூன் 23- A2 vs B1, பார்படாஸ்
  • ஜூன் 23- C2 vs D1, ஆன்டிகுவா & பார்புடா
  • ஜூன் 24- B2 vs A1, செயின்ட் லூசியா
  • ஜூன் 24- C1 vs D2, கிரெனடைன்ஸ்
Advertisement

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆட்டவணை

  • ஜூன் 26- அரையிறுதி போட்டி 1, கயானா
  • ஜூன் 27- அரையிறுதி போட்டி 2, டிரினிடாட் & டொபாகோ
  • ஜூன் 29- இறுதிப்போட்டி, பார்படாஸ்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News