வங்கதேசத்திற்கு எதிரான த்ரில் வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Jun 11 2024 12:47 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லார் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 46 ரன்களையும், டேவிட் மில்லர் 29 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் இணைந்த தாவ்ஹித் ஹிரிடோய் - மஹ்முதுல்லா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற நிலையில் தாவ்ஹித் ஹிரிடோய் 37 ரன்களுக்கும், மஹ்முதுல்லா 20 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி பல சாதனைகளை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் மிக குறைந்த இலக்கை கட்டுப்படுத்திய அணி எனும் சாதனையை பதிவுசெய்துள்ளது. முன்னதாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராகவும் 120 ரன்களைக் கட்டுப்படுத்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி 5ஆவது முறையாக 5 ரன்களுக்கு கீழ் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. வேறெந்த அணியும் இரண்டு முறைக்கு மேல் டி20 உலகக்கோப்பை தொடரில் 5 ரன்களுக்கு கீழ் வெற்றியைப் பதிவுசெய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்திற்கு எதிராக 9அவது முறையாக தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெதுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை