வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பார்போடாஸில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பில் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பில் சால்ட் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 40 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் 17 ரன்களிலும், பென் டக்கெட் 14 ரன்களிலும், ஹாரி ப்ரூக் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் 27 ரன்களையும், சாம் கரண் 13 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 19.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விண்டீஸ் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய விண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - பிராண்டன் கிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங்ஸ் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து கைல் மேயர்ஸும் 4 சிக்சர்களுடன் 35 எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷாய் ஹோப் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 36 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 13 ரன்களிலும், ஹெட்மையர் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் பாவெல் 31 ரன்களையும், ரஸல் 29 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News