பங்களதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பு சீசன் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் தர்பார் ராஜ்ஷாஹி - தாக்கா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தாக்க்கா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜ்ஷாஹி அணியை பந்துவீச அழைத்தது. அதன்பாடி தாக்கா கேப்பிட்டல்ஸ் அணியானது தொடத்த்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

இருப்பினும் ஷஹாதத் ஹொசைன் திபு அரைசதம் கடந்ததுடன் 50 ரன்களையும், ஸ்டீவி எஸ்கினாசி 46 ரன்களையும் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதன்மூலம் தாக்கா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரனகளைச் சேர்த்தது. ராஜ்ஷாஹி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தஸ்கின் அஹ்மத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தர்பார் ராஜ்ஷாஹி அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது ஹாரிஸ் 12 ரன்னிலும், ஜிஷன் அலாம் ரன்கள் ஏதுமின்றியும், யஷிர் அலி 22 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அதன்பின் இணைந்த கேப்டன் மொமினுல் ஹக் 73 ரன்களையும், ரியான் பர்ல் 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தர்பார் ராஜ்ஷாஹி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் தர்பார் ராஜ்ஷாஹி அணி சார்பில் விளையாடிய வங்கதேச அணியின் வேகப்பந்து விச்சாளர் தஸ்கின் அஹ்மத் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மூன்றாவது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் மலேசியாவின் சயாஸ்ருல் இட்ரஸ் மற்றும் லெய்செஸ்டர் அணியின் கொலின் அக்கர்மன் ஆகியோர் இதைச் செய்துள்ளனர்.

இதுதவிர்த்து ஃபிரான்சைஸ் டி20 லீக் வரலாற்றில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் மற்றும் முழு உறுப்பினர் நாட்டிலிருந்து இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் எனும் சாதனைகளையும் தஸ்கின் அஹ்மத் படைத்துள்ளார். மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தஸ்கின் அஹ்மத் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News