Bangladesh premier league
6,4,4,6,4,6 - கைல் மேயர்ஸ் ஓவரை பந்தாடிய நூருல் ஹசன் - வைரலாகும் காணொளி!
உலகின் பல்வேறு நாடுகளும் பிரான்சைஸ் லீக் டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. அந்தவகையில் வங்கதேச கிரிக்கெட் வாரியமும் பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இதில் நடப்பு சீசனானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ராங்பூர் ரைடர்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் பாரிஷால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற ராங்பூர் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஃபார்ச்சூன் அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்ஹை அமைத்து கொடுத்தனர். இதில் தமிம் இக்பால் 40 ரன்களுக்கும், சாண்டோ 41 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
Related Cricket News on Bangladesh premier league
-
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த தஸ்கின் அஹ்மத்!
20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மூன்றாவது வீரர் எனும் பெருமையை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹ்மத் பெற்றுள்ளார். ...
-
சோயப் மாலிக்கின் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து; வங்கதேச கிரிக்கெட்வாரியம் நடவடிக்கை!
பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவருடை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
களநடுவருடன் மீண்டும் வம்புக்கு நின்ற ஷகில் அல் ஹசன்!
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கள நடுவருடன் கோபமாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47