மீண்டும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஐசிசி தரவரிசை!

Updated: Thu, Feb 16 2023 12:18 IST
Image Source: Google

ஐசிசி தரவரிசை பட்டியலில் மீண்டும் ஒரு குழப்பத்தை இந்திய ரசிகர்கள் சந்தித்துள்ளனர். மதிய நேர நிலவரப்படி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 115 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்ததாகவும் ஐசிசியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நம்பி பல்வேறு ரசிகர்களும் மகிழ்ச்சியை கொண்டாடினர். காரணம் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்திலும் முதல் இடத்தை ஒரே தருணத்தில் பிடித்தது.

இந்த நிலையில் மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு அந்த அதிர்ச்சி செய்தி வந்தது.அதாவது ஐசிசி தளத்தில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவ்வாறு தவறுதலாக பதியப்பட்டிருந்ததாகவும், உண்மையில் ஆஸ்திரேலியா அணி தான் 126 புள்ளிகள் உடன் முதலிடத்திலும், இந்திய அணி 115 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மாற்றி அமைக்கப்பட்டது.

இதனை பார்த்ததும் ரசிகர்கள் கடும் அப்செட் ஆனர். எனினும் இந்திய அணி டெல்லி டெஸ்ட் போட்டியை வென்று தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று முன்னிலை வகிக்கும் போது இந்திய அணி முதல் இடத்தை பிடிக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் மூன்று பேர் ஒரே தருணத்தில் முதலிடத்தில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் டி20 பேட்ஸ்மேன்களுக்காண தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இதேபோன்று ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதலிடத்தில் உள்ளார்.

இதேபோன்று டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் அரை சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜடேஜா நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் மூன்று இந்திய வீரர்கள் முதல் இடத்தில் இருப்பது உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்தை காட்டுவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை