ஐசிசி டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் இந்திய அணி!

Updated: Mon, May 06 2024 20:53 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் இந்திய அணி! (Image Source: Google)

ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

அதன்பின் சூப்பர் 8 சுற்றின் முடிவில் அதிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி, அதில் வெற்றிபெறும் இரு அணிகள் இறுதிச்சுற்றில் விளையாடவுள்ளன. இத்தொடரில் இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்திய அணியுடன் சேர்த்து பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட அணிகள் இடம்பிடித்துள்ளனர். 

இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், நடராஜன், கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு இந்த இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  

 

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸரான அடிடாஸ் நிறுவனம் தங்கள் அதிராகப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இக்காணொளியானது தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை