சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

Advertisement

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியானது நேற்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு டுவைன் ஸ்மித் மற்றும் பிரையன் லாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மித் ஒருமுனையில் நிதானமாக விளையாடிய நிலையில், பிரையன் லாரா 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய பெர்கின்ஸ் 6 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

Advertisement

பின்னர் டுவைன் ஸ்மித்துடன் இணைந்த லிண்டல் சிம்மன்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுவைன் ஸ்மித் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய சிம்மன்ஸும் 57 ரன்களை மாட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கியா வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இந்தியா மாஸ்டர்ஸ் அணி தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றின. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு அம்பத்தி ராயுடு மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 25 ரன்களை எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கர் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குர்கீரத் மான் சிங்கும் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்திய அம்பத்தி ராயுடு 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய யூசுப் பதானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யுவராஜ் சிங் 13 ரன்களையும், ஸ்டூவர்ட் பின்னி 16 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இந்திய மாஸ்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருதை வென்றார்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News