Texas Super Kings vs Washington Freedom Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

TEX vs WAS Match Details

  • மோதும் அணிகள்- வாஷிங்டன் ஃப்ரீடம் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்
  • இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூலை 03, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

Lauderhill, Florida Pitch Report

ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 154 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 245 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

TEX vs WAS: Where to Watch?

Advertisement

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

TEX vs WAS Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டெவன் கான்வே
  • பேட்ஸ்மேன்கள் - கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மார்க் சாப்மேன்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், டோனவன் ஃபெரீரா, ஜாக் எட்வர்ட்ஸ், மிட்செல் ஓவன் (துணைகேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- நூர் அஹ்மத், நந்த்ரே பர்கர், சவுரப் நேத்ரவல்கர்

TEX vs WAS Predicted Playing 11

Advertisement

Washington Freedom XI : மிட்செல் ஓவன், ரச்சின் ரவீந்திரா, ஆண்ட்ரீஸ் கௌஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), ஜாக் எட்வர்ட்ஸ், க்ளென் பிலிப்ஸ், ஓபஸ் பைனார், முக்தார் அகமது, இயன் ஹாலண்ட், சவுரப் நேத்ரவல்கர், அமில அபோன்சோ

Texas Super Kings XI : ஸ்மித் படேல், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டான்), சைதேஜா முக்கமல்லா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷுபம் ரஞ்சனே, டொனோவன் ஃபெரீரா, கால்வின் சாவேஜ், அகேல் ஹொசைன், நூர் அகமது, நந்த்ரே பர்கர் மற்றும் ஜியா-உல்-ஹக்

TEX vs WAS Dream11 Prediction, TEX vs WAS Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, TEX vs WAS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Texas Super Kings vs Washington Freedom

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News