தி ஹெண்ட்ரெட் எனப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ர நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியதும், அந்த அணியின் தொடக்க வீரர் லித் ரன் ஏதுமின்றி வெளியேறி ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வில்லி 16, ஹாரி ப்ரூக் 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

ஆனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸிஸ் அரைசதம் கடந்த கையோடு 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஆடம் ஹோஸ் 30 ரன்களை விளாசினார். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய லண்டன் ஸ்பிரிட் அணிக்கு ஆடம் ரோஸிங்டன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 15 பந்துகளில் அரைசதம் கடந்து, 100 பந்துகள் கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 25 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரிகள் என 66 ரன்களைச் சேர்த்திருந்த ரோஸிங்டன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்களைச் சேர்த்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் 44 பந்துகளிலேயே லண்டன் ஸ்பிரிட் அணி இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஆடம் ரோஸிங்டன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News