தி ஹண்ட்ரட் என்றழைக்கப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆடவர் நடப்பாண்டு சீசனில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், கோஹ்லர் காட்மோர், காலின் முன்ரோ ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய சாம் ஹைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார். 

Advertisement

பின் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 63 ரன்களைச் சேர்த்த நிலையில் சாம் ஹைனும் விக்கெட்டை இழக்க, 100 பந்துகள் முடிவில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணியில் ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஆலன் 28 ரன்களுக்கும், கான்வே 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 3, ஜார்ஜ் கார்டன் 8, டிம் டேவிட் 5 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதனால் 99 பந்துகளிலேயே சதர்ன் பிரேவ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ட்ரெண்ட் அணி தரப்பில் டேனியல் சாம்ஸ், லூயிஸ் கிரிகோரி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் ட்ரெண்ட் ராக்டெக்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News