இங்கிலாந்தின் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேல்ஷ் ஃபையர் அணியில் சோஃபி டங்க்லி 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த கேப்டன் டாமி பியூமண்ட் மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் டாமி பியூமண்ட் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாரா பிரைஸும் ரன்கல் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய ஜெஸ் ஜோனசன் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய ஹீலி மேத்யூஸ் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெஸ் ஜோனசன் அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் வேல்ஷ் ஃபையர் இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களைச் சேர்த்தது. லண்டன் அணி தரப்பில் எவா கிரே மற்றும் சாரா கிளென் ஆகியோர் அதலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து இலங்கை நோக்கி களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியில் அதிரடிய வீராங்கனை மெக் லெனிங் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோர்டெலியா கிரிஃபித் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த ஜார்ஜியா ரெட்மெய்ன் - கேப்டன் ஹீதர் நைட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின் ஹீதர் நைட் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேனியல் கிப்சன் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா ரெட்மெய்னும் 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

 

இதனால் கடைசி 5 பந்துகளில் லண்டன் ஸ்பிரிட் அணி வெற்றிபெற 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதேசமயம் களத்தில் இருந்த தீப்தி சர்மா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லண்டன் ஸ்பிரிட் அணியானது 98 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வேல்ஷ் ஃபையர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் லண்டன் ஸ்பிரிட் அணியானது தி ஹண்ட்ரட் மகளிர் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News