தொடர் மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி20; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sun, Dec 15 2024 08:22 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இப்போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை மற்றும் மின்னல் காரணமாக போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. 

பின் மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதன் காரணமாக, 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் (டிசம்பர் 17) முதல் தொடங்கவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.

இதில் தென் ஆப்பிரிக்க அணியானது மீண்டும் டெம்பா பவுமா தலைமையில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் தொடர்கிறார். ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தன் அணி விளையடவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், குவேனா மஃபாகா, ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென்.

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், ஹாரிஸ் ரவுஃப், கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அஃப்ரிடி, சுஃபியான் முகீம், தயாப் தாஹிர், உஸ்மான் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை