இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

Updated: Sun, Sep 08 2024 09:47 IST
Image Source: Google

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

மேற்கொண்டு வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இத்தொடரில் விளையாட மட்டார்கள் என்பதால் அணியின் வேகப்பந்து வீச்சு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெச்ட் போட்டிய்ல் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி செப்டம்பர் 9ஆம் தேதி கலை 9.45 மணிக்கு பேடிஎம் இன்சைடர் எனும் இணைய தளத்தில் ரசிகர்களில் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு டிக்கெட்டின் விலையானது ரூ.1000 முதல் தொடங்கி ரூ.15000 வரை விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வங்கதேச அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை