ரிஷப் பந்தை நேரில் சந்தித்த யுவராஜ் சிங்!

Updated: Fri, Mar 17 2023 11:19 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.

இதனை தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ள ரிஷப் பந்த் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை முன்னேறி வந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஓராண்டுக்கு மேலாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நேரில் சந்தித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய டுவீட்டரில், “இந்த சாம்பியன் மீண்டும் எழப் போகிறார். ஒரு பையன் எப்போதும் நேர்மறையாகவும் வேடிக்கையாகவும் இருப்பான்” என பதிவிட்டுள்ளார். இவர்களது சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை