இம்மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியின்போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கும்போது கேட்ச் பிடிக்க முயற்சித்து வலது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது. 

Advertisement

இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியுடன் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதீ இணைய உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

Advertisement

இதுகுறித்து நியூசிலாந்து அணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வலது கை கட்டை விரல் காயத்திலிருந்து டிம் சௌதீ குணமடைந்து வருவதால் அவர் நியூசிலாந்து அணியுடன் இந்தவார இறுதியில் இணையவுள்ளார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருடன் நியூசிலாந்து அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசனும்  இணையவுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைத் தொடரின் முதன்மையான போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News