டிஎன்பிஎல் 2021: சேலம் ஸ்பார்டன்ஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!

Updated: Sat, Jul 24 2021 13:13 IST
Image Source: Google

டிஎன்பில் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன.

இதில் இரவு நடைபெறும் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த இரு அணிகளும் நடப்பு சீசனில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அணிகளாகும். 

அதேபோல் இந்த இரு அணிகளுடைய முதல் லீக் ஆட்டங்களும் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டதாலும் இரு அணிகளில் பேட்டிங் திறனை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

அதன்படி விஜய் சங்கர், விஜய் குமார், முருகன் அஸ்வின், பெரியசாமி என சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஒரு நட்சத்திர பட்டாளத்தையே தங்கள் அணியில் வைத்துள்ளது. 

அதேபோல் திருப்பூர் தமிழன்ஸ் அணியிலும் சித்தார்த், அஸ்வின் கிறிஸ்ட், மான் பாஃப்னா என அதிரடி வீரர்கள் இருப்பதால், நிச்சயம் எதிரணிக்கு சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அணி விவரம்

சேலம் ஸ்பார்டன்ஸ்: பி பிரணேஷ், எஸ் அபிஷீக், அக்‌ஷய் வி சீனிவாசன், முருகன் அஸ்வின், எஸ் பூபாலன், டேரில் எஸ் ஃபெராரியோ, எம் கணேஷ் மூர்த்தி, கோபிநாத் கேஎச், டிடி லோகேஷ் ராஜ், ஜி பெரியசாமி, எஸ் சுபம் மேத்தா, யு சுஷில், எம் விஜய் குமார், விஜய் சங்கர், கிஷூர் ஜி, ஆரிஃப் ஏ, சுகனேஷ் எம், அபிநவ் விஷ்ணு, ரத்னம் ஏவிஆர், ஆர் கார்த்திகேயன், வாஷிங்டன் சுந்தர்.

ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்: எஸ் தினேஷ், எஸ் மணிகண்டன், ஆர்.ஐ.ராஜ்குமார், எஸ் மோகன் பிரசாத், எஸ் சித்தார்த், எஸ் அரவிந்த், மான் கே பாஃப்னா, பி பிரான்சிஸ் ரோகின்ஸ், கே கவுதம் தாமரை கண்ணன், அஸ்வின் கிறிஸ்ட் ஏ, துஷார் ரஹேஜா,ஏ கருப்புசாமி, சி.ஸ்ரீராம், எம் முகமது, முகமது ஆஷிக் என், அஃபான் காதர் எம், ஆதித்யா கிரிதர், சாதியன்னார்யன் எல், எம் ரூபன் ராஜ், மோகன் பிரசாத் எஸ், மான் கே பாஃப்னா, ஆர் ராஜ்குமார், நடராஜன் எஸ்.டி, அஸ்வின் பாலாஜி எஸ், தினேஷ் கார்த்திக்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை