டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.

Advertisement

இதையடுத்து கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் மற்றும் சுரேஷ் குமார் இணை களமிறங்கினர். இதில் சச்சின் 7 பந்துகளை சந்தித்த நிலையிலும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சுரேஷ் குமாருடன் இணைந்த நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் முதல் பந்திலிருந்தே  தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

பின் அவருக்கு துணையாக விளையாடி வந்த சுரேஷ் குமார் 33 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராம் அரவிந்த் 18 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. மறுபக்கம் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த சாய் சுதர்சன் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 90 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்த பந்திலேயே கேப்டன் ஷாருக் கானும் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் பெய்யாமொழி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி நெல்லை அணி விளையாடவுள்ளது.  

இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணியில் கேப்டன் அருண் கார்த்திக் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ண் மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரீ நெரஞ்சன் 25 ரன்களிலும், ஈஸ்வரன் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அஜித்தேஷ் குருஸ்வாமி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

Advertisement

ஆனால் மறுப்பக்கம் களமிறங்கிய சோனு யாதவ் 20 ரன்களிலும், அருண் குமார் 3 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தலும் மறுமுனையில் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட அஜித்தேஷ் 58 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். அதன்பின் 60 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 112 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் அடுத்து களமிறங்கிய பொய்யாமொழி சிக்சர் அடித்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன, 4 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியையும் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News