தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்றைய 23 ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படிம் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

Advertisement

கேப்டன் அருண் கார்த்திக் நிதானமாக விளையாடி 33 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, என் எஸ் ஹரிஷ் 21 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 159 ரன்களை எடுத்தது.

Advertisement

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் காளமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு விமல் குமார் - ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ஆரம்பம் முதலே பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். 

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் சிங் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் ரன் அவுட்டாக, மறுமுனையில் விளையாடிய விமல் குமாரும் அரைசதம் கடந்தார். பின் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 143 ரன்களைச் சேர்த்திருந்த விமல் குமார் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுபோத் பாடியும் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் ஆதிதியா கணேஷ், கேப்டன் பாபா இந்திரஜித் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News