டிஎன்பிஎல் 2025, குவாலிபையர் 2: விமல் குமாரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆசிக் 8 ரன்னிலும், மோஹித் ஹரிஹரன் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபாரஜித் மற்றும் ஜெகதீசன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களில் அபாரஜித் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 81 ரன்களைச் சேர்த்திருந்த ஜெகதீசனும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் சசிதரன் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டிராகன்ஸ் அணிக்கு ஷிவம் சிங் மற்றும் அஸ்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மான் பாஃப்னாவும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் மற்றும் விமல் குமார் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அரைசதத்தை நெருங்கிய இந்திரஜித் 42 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டாமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து ஹனி சைனி 12 ரன்களுக்கும், தினேஷ் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த விமல் குமார் அரைசதம் கடந்ததுடன் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News