திருநெல்வேலி: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அமித் சாத்விக் மற்றும் எசக்கிமுத்து ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஜிதேந்திர குமார் 6 ரன்னிலும், லோகேஷ்வர் 21 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சச்சினும் 24 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த ராகவேந்திரன் 11, ஷாருக் கான் 19, விஷா வைத்யா 13 என வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் ஒருபக்கம் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய திவாகர், சித்தார்த், வித்யூத் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே சித்தார்த் 21 ரன்களை எடுத்தார். இதன் கரணமாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்திருந்து. திருப்பூர் அணி தரப்பில் எசக்கிமுத்து 3 விக்கெட்டுகளையும், நடராஜன் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர் இலக்கி நோக்கி விளையாடிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் சத்விக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் துஷார் ரஹேஜா 13 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கேப்டன் சாய் கிஷோர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 21 ரன்னிலும் என நடையைக் கட்டினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பாக விளையாடிய அமித் சாத்விக் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமித் சாத்விக் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 66 ரன்களையும், முகமது அலி 2 சிக்ஸர்களுடன் 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 16.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News