இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியியில் சதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஓவல் இன்விசிபில் அணியானது வில் ஜேக்ஸ், சாம் கரண் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 147 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 37 ரன்களையும், கரண் சகோதரர்கள் தலா 25 ரன்களையும் சேர்த்தனர். சதர்ன் பிரேவ் அணி தரப்பில் அகீல் ஹோசைன் மற்றும் தைமல் மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணிக்கு அலெக்ஸ் டேவிஸ் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் டேவிஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸும் 24 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இன்னிங்ஸ் முடிவில் சதர்ன் பிரேவ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்தது. ஓவல் அணி தரப்பில் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஓவல் இன்விசிபில் அணியானது 17 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மீண்டும் தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.

 

இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சாகிப் மஹ்மூத் ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.  இந்நிலையில் இப்போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி தரப்பில் விளையாடிய டாம் கரண் வித்தியாசமான சிக்ஸரை விளாசிய நிலையில் அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் இழந்தார். 

Advertisement

அதன்படி, சதர்ன் பிரேவ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 89ஆவது பந்தை யாரும் எதிர்பாராத வகையில் டாம் கரண் நடந்துவந்து வித்தியாசமான ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசி அசத்தினார். அதன்பின் அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்க முயன்ற டாம் கரண், பந்தை சரியாக கணித்த விளையாடாத காரணத்தால் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே டாம் கரண் விக்கெட்டாஇ இழந்த காணொளி வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News