ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் சிறப்பு சாதனை படைத்துள்ளார். 

Advertisement

அதன்படி இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரென்ட் போல்ட் 2.1 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் டிரென்ட் போல்ட் தனது 300ஆவது விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது நியூசிலாந்து வீரர்  எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் படைத்துள்ளார்.

முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் டிம் சௌதீ 343 டி20 போட்டிகளில் 285 இன்னிங்ஸில் விளையாடி 343 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேசயம் நியூசிலாந்தின் இஷ் சோதி 288 போட்டிகளில் 278 இன்னிங்ஸில் விளையாடி 310 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், டிரென்ட் போல்ட் 257 போட்டிகளில் 255 இன்னிங்ஸ்களில் விளையாடி 302 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்த்க்கது .

இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியன் ரிக்கெல்டன் 61 ரன்னிலும், ரோஹித் சர்மா 53 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் தலா 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.  இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை தரப்பில் கரண் சர்மா மற்றும் டிரென்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News