ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி ஏபிடி-யை கண் முன் நிறுத்திய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!

Updated: Sun, Sep 01 2024 12:45 IST
Image Source: Google

கரீபியன் பிரீமியர் லீக் 2024இல் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், டிரினிபாகோ நைட் ரைடர்ஸ் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொண்டது, இதில் கீரன் பொல்லார்ட் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்படி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 250 ரன்களை குவிக்க, அதனைத்து துரத்திய செயின்ட் கிட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 206 ரன்களை மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியானது இப்போட்டியில் நிலைத்திருக்க ஒரு அட்டகாசமான தொடக்கம் தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் முதல் இரண்டு விக்கெட்டுகளை 18 ரன்களுக்கு இழந்தனர். இதன் பின்னர், எவின் லூயிஸ் மற்றும் மைக்கேல் லூயிஸ் ஆகியோர் அணியின் ரன் விகிதத்தை அதிகரிக்க முயன்றனர் ஆனால் லூயிஸ் 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அதன்பின்னர் மைக்கேல் லூயிஸுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

ஸ்டப்ஸ் களத்தில் சிறப்பாக விளையாடி சில சிறந்த ஷாட்களை விளையாடினார். அப்படி ஒரு ஷாட் ஒன்பதாவது ஓவரின் கடைசி பந்தில் வந்தது. அதன்படி அந்த ஓவரை வீசிய டெரன்ஸ் ஹிண்ட்ஸ் அந்த பந்தை நான்காவது ஸ்டம்ப் லைனில் வீசினார். ஸ்டப்ஸ் ஸ்டம்புகளுக்கு வெளியே தன்னை நன்றாக அமைத்துக்கொண்டு, ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை அடித்ததுடன் அதனை தேர்ட்மேன் திசைக்கும் மேல் சிக்ஸருக்கும் பறக்கவிட்டு மிரட்டினார். ஸ்டப்ஸின் இந்த அற்புதமான பார்வையாளர்களுக்கு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸை நினைவூட்டியது.

 

Also Read: Funding To Save Test Cricket

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 என்ற புனைப்பெயரைக் கொண்ட ஏபி டி வில்லியர்ஸ் இதுபோல் பல முறை ஸ்கூப் ஷாட்டை விளையாடி சிக்ஸர்களை பறக்கவைத்துள்ளார். மேலும் இந்த ஷாட்டின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அவர் உருவாக்கினார். இந்நிலையில் அதே பாணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் தேர்ட்மேன் திசையில் சிக்ஸர் அடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை