முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே - காணொலி!

Updated: Mon, Apr 08 2024 20:07 IST
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே - காணொலி! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் மொயீன் அலி, தீபக் சஹார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பிலிப் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீசினார். அதன்படி இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட பிலிப் சால்ட் அதிரடியாக தொடங்க நினைத்து பந்தை பாய்ண்ட் திசையில் பவுண்டரியை நோக்கி விளாசினார். பந்தும் அவர் எதிர்பார்த்ததைப் போலவே பேட்டில் பட்டு பவுண்டரியை நோக்கி பறந்தது.

 

அதேசமயம் அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா அதனை லாவகமாக தாவிப்பிடித்து அசத்தினார். இதன்மூலம் அதிரடியாக விளையாட நினைத்த பிலிப் சால்ட் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் துஷார் தேஷ்பாண்டே தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை