ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய் அரபு அமீரக அண்டர்19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அண்டர்19 அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஆர்யன் சக்சேனா - அக்‌ஷத் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆர்யன் சக்சேனா 9 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய யாயின் ராய் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஈதன் டிசோசா 17 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான அக்‌ஷத் ராய் 26 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய முகமது ரியான் கான் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் அயான் அஃப்சல் கான் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரியான் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களில் உத்திஷ் சுரி 16 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் யுஏஇ அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டுகளையும், சேட்டன் சர்மா மற்றும் ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News