ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 65ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி  6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Advertisement

ஐதராபாத் அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் 5 வீரர்கள் பட்டியலில் உம்ரான் மாலிக் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். 

மேலும் ஐபிஎல் ஒரே சீசனில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை உம்ரான் மாலிக் படைத்தார். இதற்கு முன்னதாக 2017 ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தனது 23ஆவது வயதில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது உம்ரான் மாலிக் தனது 22-வது வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார்.   

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் 5 வீரர்கள் பட்டியலில் முறையே யுஸ்வேந்திர சஹால் (24), வனிந்து ஹசரங்க (23), ககிசோ ரபாடா (22), உம்ரான் மாலிக் (21), குல்தீப் யாதவ் (20) ஆகியோர் உள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News