ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக்கை வெளியேற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; தகவல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா. மேலும் எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர்.
மேற்கொண்டு இந்த ஏலத்திற்கு முன்னதாக எந்தெந்த வீரர்கள் தங்களது அணியால் தக்கவைக்கப்படுவார்கள் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளன. மேற்கொண்டு இந்த முறை தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்க கோரி ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் விரும்பம் தெரிவித்துள்ளன. ஆனால் ஐபிஎல் அணிகளின் ரிடென்ஷன் விதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை தங்கள் அணியில் இருந்து வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது அதிவேகப்பந்து வீச்சின் காரணமாக ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த உம்ரான் மாலிக், ஐபிஎல் தொடரில் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர்களில் ஒருவராகவும் சாதனை படைத்தார்.
இதன்மூலம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவரால், அதனை தக்கவைத்துகொள்ள முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவருக்கு பெரிதளவில் வாய்ப்புகளானது கொடுக்கப்படவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து ஓரங்கப்பட்ட அவரை, தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெளியேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதனால் எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் உம்ரான் மாலிக்கை வாங்க மற்ற அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரில் 28 போட்டிகளில் விளையாடியுள்ள உம்ரான் மாலிக் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் இந்திய அணிக்காக 8 டி20 மற்றும் 10 ஒருநாள் போட்டிகளில் விளையடியுள்ள அவர், மொத்தமாக 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.