இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், மீதமுள்ள இரு இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. 

Advertisement

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போட்டியில் சிஎஸ்கே வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நல்ல ரன் ரெட்டில் வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. 

Advertisement

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் 600 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன்கள் சேர்த்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர், "அனைத்து டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லாரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை, அது நடக்கவே நடக்காத ஒன்று" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரைலீ ரூஸோவ் மற்றும் விராட் கோலி இருவரும் மாறி மாறி செய்த சைகைகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News