Advertisement

 

Advertisement

United States vs Ireland, Match 30 Dream11 PredictionICC T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் அயர்லாந்து அணி ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவினாலும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது. மறுபக்கம் அமெரிக்க அணியும் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றியைப் பதிவுசெய்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

USA vs IRE: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அமெரிக்கா vs அயர்லாந்து
  • இடம் - சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானம், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூன் 14, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

USA vs IRE Pitch Report

இந்தப் போட்டி ஃபுளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு நடந்த டி20 சர்வதேச போட்டிகளில் பெரும்பாலானவற்றில் சேஸிங் செய்துள்ள அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 157 ரன்களாக உள்ளது. அதேசமயம் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 245 ரன்கள் உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் இங்கு நடைபெறும் போட்டிகளில் வானவேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என்பதை ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

Advertisement

USA vs IRE T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 02
  • அமெரிக்கா - 01
  • அயர்லாந்து - 01

USA vs IRE: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Advertisement

United States of America vs Ireland Probable Playing XI

அமெரிக்கா உத்தேச லெவன்: ஸ்டீவன் டெய்லர், மோனாங்க் படேல் (கேப்டன்), ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்டுஷ் கென்சிகே, சவுரப் நேத்ரவல்கர், அலி கான்.

அயர்லாந்து உத்தேச லெவன்: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோஷுவா லிட்டில்.

Advertisement

USA vs IRE T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஆண்ட்ரீஸ் கௌஸ், மோனாங்க் படேல்
  • பேட்ஸ்மேன் - ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - கோரி ஆண்டர்சன், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அதிர் (கேப்டன்), கரேத் டெலானி
  • பந்துவீச்சாளர்கள் - நோஸ்டுஷ் கென்சிஜ், சவுரப் நேத்ரவல்கர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங்.

USA vs IRE Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match USA vs IRE, USA vs IRE Dream11 Team, Fantasy  Cricket Tips, USA vs IRE Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United States of America vs Ireland

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News