Varun Chakravarth Video: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் வ்ருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Advertisement

சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவார்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ராஜகோபால் 74 ரன்களைச் சேர்த்தார். டிராகன்ஸ் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் அஸ்வின் 36 ரன்களையும், ஷிவம் சிங் 34 ரன்களையும், ஹனி சைனி 35 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணி வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட வருண் சக்ரவர்த்தி சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இப்போட்டியில் வருன் சக்ரவர்த்தி கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளியை டிஎன்பிஎல் நிர்வாகம் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளிட்டுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

ஏனெனில் கடைசி இரண்டு பந்துகளில் திண்டுக்கல் அணி வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. மேலும் களத்தில் வருண் சக்ரவ்ர்த்தி ஸ்டிரைக்கில் இருந்தார். இதுபோன்ற சூழ்நிலையில் அந்த அணி நிச்சயம் வெற்றிபெறாது என்றே கணிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வருண் சக்ரவர்த்தி அற்புதமான ஷாட்டுகளை விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்திருந்தார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News