நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஹேஜா ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய ஜெகதீசன் 6 ரன்னிலும், பிரதோஷ் பால் 28 ரன்னிலும், பாபா இந்திரஜித் 7 ரன்னிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா தனது அரைசதத்தை கடந்த நிலையில், இறுதியில் 4 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து வந்த ஆண்ட்ரே சித்தார்த் 40 ரன்களையும், முகமது அலி 48 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழக்க, தமிழ்நாடு அணி 48.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்களில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தர்ஷன் நல்கண்டெே 6 விக்கெட்டுகளையும், ஹர்ஷ் தூபே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய விதர்பா அணிக்கு துருவ் ஷோரே மற்றும் யாஷ் ரதோட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யாஷ் ரத்தோட் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான துருவ் ஷோரே 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கருண் நாயர் மற்றும் யாஷ் கதம் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுபக்கம் யாஷ் கதம் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மாவும் 23 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 111 ரன்களையும், அவருடன் இணைந்த ஷுபம் தூபே 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் விதர்பா அணி 43.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News