Karun nair century
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; அரையிறுதியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் அபிஜீத் தோமர், மானவ் சுதர் ஆகியோர் தலா 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் மஹிபால் லோம்ரோர் 32 ரன்களிலும், தீபக் ஹூடா 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷுபம் கர்வால் - கார்திக் சர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களில் கார்வால் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் கார்த்திக் சர்மாவும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Karun nair century
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; தொடர் வெற்றியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: உத்திர பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் விதர்பா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கருண் நாயர் சதத்தின் மூலம் தமிழ்நாட்டை வீழ்த்தியது விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் விதர்பா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மகாராஜா கோப்பை 2024: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
மங்களூரு டிராகன்ஸ் அணிக்கு எதிரான மகாராஜா கோப்பை லீக் போட்டியில் மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டன் கருண் நாயர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
கவுண்டி சாம்பியன்ஷிப் 2023: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
சர்ரே அணிக்கெதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக களமிறங்கிய இந்திய வீரர் கருண் நாயர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24