இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உத்திர பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

மேலும் மழை காரணமாக இப்போட்டியானது 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹெஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் பால் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான துஷார் ரஹேஜாவும் 15 ரன்னிலும், பாபா இந்திரஜித் 27 ரன்னிலும், விஜய் சங்கர் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 68 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த ஷாருக் கான் மற்றும் முகமது அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் சதத்தைப் பதிவுசெய்ய, அவருடன் இணைந்து முகமது அலியும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 216 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 13 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 132 ரன்களையும், முகமது அலி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 284 ரன்களைச் சேர்த்தது. உத்திர பிரதேச அணி தரப்பில் யாஷ் தயால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய உத்திர பிரதேச அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அபிஷேக் கோஸ்வாமி 14 ரன்னிலும், ஆர்யன் ஜூயல் 8 ரன்னிலும், கரண் சர்மா 8 ரன்னிலும், நிதீஷ் ரானா 17 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியம் கார்க் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரிங்கு சிங் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதியில் ரிங்கு சிங்கும் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் உத்திர பிரதேச அணி 32.5 ஓவர்களில் ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் உத்திர பிரதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News