இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா மற்றும் கருண் நாயர தலைமையிலான விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதரா நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கர்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய அனீஷ் கேவியும் 21 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இவர்களைத்தொடர்ந்து அணியின் கேப்டன் மயங்க் அகர்வாலும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மாறன் ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீஜித் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மாறன் ரவிச்சந்திரன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அவருடன் இணைந்து விளையாடிய கிருஷ்ணன் ஸ்ரீஜித்தும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிருஷ்ணன் ஸ்ரீஜித் விக்கெட்டை இழக்க, சதமடித்து அசத்திய ஸ்மாறன் ரவிச்சந்திரன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிரங்கிய அபினோவ் மனோஹர் தனது பங்கிற்கு 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்க்க கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்களைச் சேர்த்தது. விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே, நாச்சிகேத் பூதே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய விதர்பா அணிக்கு துருவ் ஷோரே அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் அவருடன் களமிறங்கிய யாஷ் ரத்தோட் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் கருண் நாயரும் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய யாஷ் கதம் 15 ரன்களுக்கும், ஜித்தேஷ் சர்மா 34 ரன்களுக்கும், ஷுபம் தூபே 8 ரன்களுக்கும், அபூர்வ் வான்கடே 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த துருவ் ஷோரே தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 110 ரன்களை சேர்த்த நிலையில் துருவ் ஷோரேவும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறக்கிய ஹர்ஷ் தூபே அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினார். இப்போட்டியில் அவர் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் விளையாடிய வீரர்கள் சோபிக்க தவறினர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் விதர்பா அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்களில் ஆல் அவுட்டானது. கர்நாடகா அணி தரப்பில் வசுகி கௌஷிக், பிரஷித் கிருஷ்ணா மற்றும் அபிலேஷ் ஷெட்டி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கர்நாடகா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5ஆவது முறையாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News