விஜய் ஹசாரே கோப்பை: ஷாருக், வாஷிங்டன் அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது.
இதில் எலைட் பி குரூப்பில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் கேப்டன் ஜேகதீசன் 20, சாய் சுதர்சன் 24, பாபா இந்திரஜித் 45, வாஷிங்டன் சுந்தர் 34, தினேஷ் கார்த்திக் 32 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதில் அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் 35 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசி 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கைத் துரத்திய மும்பை அணி வீரர்கள் தமிழக வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் கேப்டன் ஷாம்ஸ் முலானி மட்டும் நிலைத்து விளையாடி 75 ரன்களைச் சேர்த்தனர். இறுதியில் 46.4 ஓவர்களிலேயே மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை மட்டுமே சேர்த்தது. தமிழ்நாடு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், மணிமாறன் சிதார்த் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.