சச்சினின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்த முயற்சித்தனர். அச்சமயத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்த நிலையில் முதல்நாள் உணவு இடைவேளையானது எடுக்கப்பட்டுள்ளது.
இதில் உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் பந்துவீசிய நிலையிலும் விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் விளையாடும் விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது 100ஆவது சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவருக்கு முன், முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்த நிலையை எட்டியிருந்தார். சச்சின் தனது கேரியரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 110 சர்வதேச போட்டிகளிலும், இலங்கைக்கு எதிராக 109 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணிக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையடிய இந்திய வீரர்கள்
- 110 போட்டிகள் - சச்சின் டெண்டுல்கர் v ஆஸ்திரேலியா
- 109 போட்டிகள் - சச்சின் டெண்டுல்கர் v இலங்கை
- 100 போட்டிகள் - விராட் கோலி v ஆஸ்திரேலியா*
- 91 போட்டிகள் - எம்எஸ் தோனி v ஆஸ்திரேலியா
- 90 போட்டிகள் - எம்எஸ் தோனி v இலங்கை
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ்தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.