Sachin tandulkar
டாப் 5 ஒருநாள் பேட்டர்களைத் தேர்வு செய்த வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவால். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சேவாக், 104 டெஸ்ட் போட்டிகளில் 23 சதம், 32 அரைசதங்கள் என 8586 ரன்களையும், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதம், 38 அரைசதங்களுடன் 8273 ரன்களையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்களுடன் 394 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சில் 136 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது டாப் 5 பேட்டர்களை விரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ளார். அதில் அவர் தனது நம்பர் ஒன் வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியைத் தேர்தெடுத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 297 போட்டிகளில் விளையாடி 50 சதம், 73 அரைசதங்களுடன் 13,963 ரன்களைக் குவித்துள்ளார்.
Related Cricket News on Sachin tandulkar
-
சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் எனும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். ...
-
சச்சினின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47